search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உ.பி. கனமழை"

    அரியானா, உ.பி.யில் பெய்த கனமழை காரணமாக யமுனை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு பாய்கிறது. டெல்லி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #Yamunariverdangermark #Yamunariver
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேசம் மற்றும் அரியானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மட்டும் மழைசார்ந்த விபத்துகளில் சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இன்று காலை சுமார் 11 மணியளவில் அரியானாவில் உள்ள ஹத்தினி குன்ட் மதகில் இருந்து வினாடிக்கு 3,11,190 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இதன் எதிரொலியாக டெல்லியில் ஓடும் யமுனை ஆற்றில் நீர்மட்டம் மெல்லமெல்ல உயர்ந்து, அபாயகட்டத்தை எட்டியுள்ளது.


    குறிப்பாக, காஷ்மீரே கேட் பகுதியில் உள்ள பழைய ரெயில்வே இரும்பு பாலத்தை யமுனை நீர் தொட்டுச் செல்கிறது. நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கிழக்கு டெல்லி கோட்ட துணை உயரதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.


    அவசர காலத்தில் மீட்பு பணிகளில் ஈடுபடுத்த 43 படகுகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. #Yamunariverdangermark  #Yamunariver
    ×